Posts

திருமுருகாற்றுப்படை - அறிமுகம்

  திருமுருகாற்றுப்படை – அறிமுகம்   தமிழ் மொழியின் தொன்மை இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து . தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் . தொல்காப்பியம் கி . மு . மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல் [1] . அந்த நூலில் , இருநூறுக்கும் மேலான இடங்களில் , தொல்காப்பியர் , “ என்ப ”, “ மொழிப ”, ” கூறுப ”, “ என்மனார் புலவர் ” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார் .  இதிலிருந்து , தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது . எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய் . அதுபோல் , இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும் . ஆகவே , கி . மு . மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும் . அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை . தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன .   சங்க இலக்கியம் சங்க காலம் என்பது கி . மு . 300 முதல் ...

திருமுருகாற்றுப்படை - மூலம்

  திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை                           5 மறுவில் கற்பின் வாணுதற் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து                      10 உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் , மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி , கணைக்கால் வாங்கிய நுசுப்பின் , பணைத்தோள் , கோபத் தன்ன தோயாப் பூந்துகில் ,                                 1...